மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாலை 6 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகளும், அசாமில் 72.14% வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 84.33% வாக்குகளும், 2016-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் 83.02% வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்நிலையில் தற்போது முதல் கட்டத்தில் சுமார் 80% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் சில இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் திரிணாமூல் கட்சித் தொண்டர்கள் மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.