ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடிக்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடிக்கிறோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் வகையில் செயல்படுகிறோம். எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல திமுக. அதனால்தான் தேர்தல் அறிக்கையில், சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்போம் எனத் தெரிவித்துள்ளோம்” என்றார்.