’செல்வராகவன் திறமையான நடிகர்’- ‘சாணிக்காயிதம்’ இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பாராட்டு!

’செல்வராகவன் திறமையான நடிகர்’ என்று சாணிக்காயிதம் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பாராட்டியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும், நடிகை ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்த சுதா கொங்கராவின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனை எழுதிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

image

கடந்த மாதம் முதல் ‘சாணிக்காயிதம்’ படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தனது ட்விட்டர் பக்கத்தில் “செல்வா சார் ஒரு நடிகர். ஒவ்வொரு இயக்குநரும் நல்ல நடிகர் என்பது பொதுவான கருத்து. ஆனால், செல்வா சார் திறமையான நடிகர்” என்று பாராட்டி இருக்கிறார்.

image

அதனை, செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM