ஜெனிலியாவின் காதல் கணவர் ரிதேஷ் தேஷ்முக் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கையில் முத்தமிடும்போது ஜெனிலியா பொறாமையோடு பார்த்து வைரலான வீடியோவிற்கு, தற்போது ஜாலியாக கணவரை பழிவாங்கும் விதமாக நடிகை ஜெனிலியா எதிர்வினையாற்றி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
தமிழின் முன்னணி நடிகையாக இருந்தபோதே நடிகை ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். காதலோடு உருகும் வீடியோ புகைப்படங்களை அடிக்கடி தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல காதலர்களுக்கு இந்தக் காதல் தம்பதியினர் முன்மாதிரியாக இருக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு விருது வழங்கும் விழாவில் ரிதேஷ் தேஷ்முக் விழாவிற்கு வந்த நடிகை பிரீத்தி ஜிந்தா கைகளில் மாறி மாறி முத்தமிடுகிறார். அதனைப் பார்க்கும் ஜெனிலியா ஓவர் பொறாமையில் காதலுடன் தவிக்கும் க்யூட் வீடியோ செம்ம்ம்ம்ம வைரல் ஆனது.
இந்நிலையில், தற்போது அந்த வைரல் வீடியோவுக்கு ஜெனிலியா கணவர் ரிதேஷிடம் எதிர்வினையாற்றுவதுபோல் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ரிதேஷை முகத்திலேயே குத்தி பாடுகிறார் ஜெனிலியா. ரிதேஷ் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டே கீழே விழுகிறார்.
For the love of the viral video.. ??? & of course @Riteishd & the cutest ting ting @realpreityzinta pic.twitter.com/wCsPhDMPcq
— Genelia Deshmukh (@geneliad) March 19, 2021
இந்த வீடியோவை ஜெனிலியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரீத்தி ஜிந்தாவையும் டேக் செய்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM