டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இந்தியாவில் “விவசாயிகளின் பாதுகாப்பு” மற்றும்  “பத்திரிகை சுதந்திரம்”  பற்றி விவாதிக்க 90 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கு இந்திய உயர் ஆணையம் பதிலளித்துள்ளது.

இந்தியாவில்விவசாயிகளின் பாதுகாப்புமற்றும்பத்திரிகை சுதந்திரம்குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு விவாதம் தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம் பதில் அளித்துள்ளது

ஒரு சீரான விவாதத்திற்கு பதிலாக, தவறான கூற்றுக்கள், ஆதாரங்கள் அல்லது உண்மைகள் இல்லாத விவாதங்கள் செய்யப்பட்டன என்று நாங்கள் வருந்துகிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக செயல்பாடு மற்றும் அதன் நிறுவனங்களை அவமதிக்கும் வகையில் இந்த விவாதங்கள் வற்புறுத்துகின்றனஎன்று இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரிட்டிஷ் ஊடகங்கள் உட்பட வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவில் உள்ளன. அவர்கள் இந்த நிகழ்வுகளை கண்டுகொண்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் ஊடக சுதந்திரம் இல்லை என்ற கேள்வி எழவில்லைஎன்று குறிப்பிட்டுள்ளது.

image

திங்களன்று, பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்தியாவில்விவசாயிகளின் பாதுகாப்புமற்றும்பத்திரிகை சுதந்திரம்பற்றி விவாதிக்க 90 நிமிடங்கள் ஒதுக்கியது. போராட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து தொழிற்கட்சி, லிபரல் ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் பல எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த இங்கிலாந்து அரசாங்கம் “இரு பிரதமர்களும் நேரில் சந்திக்கும் போது இந்தியாவுடன், இந்த கவலைகள் பற்றி பேசப்படும்.” என தெரிவித்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெய்டன்ஹெட் லிபரல் டெமக்ராட் தலைவர் குர்ச் சிங் ஆரம்பித்த மனுவுக்கு இந்த விவாதம் பதிலளித்தது. இந்த மனுவிற்கு சில வாரங்களுக்குள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இங்கிலாந்து மக்களிடமிருந்து கையொப்பங்கள் கிடைத்தன.

image

ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் மார்ட்டின், வேளாண் சீர்திருத்த சட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் முடிவு தொடர்பான விஷயம் என்று இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது. எனவே நாங்கள் இப்போது சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கவில்லை. அச்சட்ட எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் விவாதிக்கிறோம். நீர்பீய்ச்சியடித்தல் மற்றும் கண்ணீர்ப்புகை மற்றும் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் மற்றும் இணைய இணைப்பில் தடங்கல் ஆகியவை கவலைக்குரியவை. பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறதுஎன தெரிவித்தார்

இந்தியாவில் விவசாயிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவலைகளை எழுப்பியதற்கு பதிலளித்த இங்கிலாந்து ஆசிய நாடுகளின் அமைச்சர் நைகல் ஆடம்ஸ், “இந்தியாவுடனான பிரிட்டனின் நெருங்கிய உறவுகள், இது தொடர்பான கவலைகளை எழுப்புவதில் தடையாக இல்லைஎன்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.