திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவந்த நிலையில் தற்போது உடன்பாடு எட்டியுள்ளது. 

image

இதையடுத்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது திமுக. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர். விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 6 தொகுதிகளை ஏற்கனவே திமுக ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.