234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!

234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அமரவைத்து அறிமுகப்படுத்தியுள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கட்சி தொடங்கியதிலிருந்தே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்று போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக சென்னையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான் தெரிவித்துள்ளர். மேலும் ஊழல், லஞ்சத்தை ஒழிக்கவே யாருடனும் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

image

பெண்களுக்கு சம உரிமை அளிக்கவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு 50% பெண்களும், 50% ஆண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது நாம் தமிழர் கட்சி சார்பாக 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM