அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கிய பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

அமெரிக்காவில் கோல்ப் விளையாட்டில் புகழ் பெற்ற வீரராக இருந்து வருபவர் 45 வயதான டைகர் உட்ஸ். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபோது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார். இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில் தனியாக பயணித்த உட்ஸ் பலத்த காயம் அடைந்து உள்ளார்.

image

இதனையடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று அவரை மீட்டனர். இதன்பின்னர் சிகிச்சைக்காக அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு காலில் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

image

கோல்ப் விளையாட்டில் 15 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ள உட்ஸ் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்பு கோல்ப் போட்டிகளில் டைகர் உட்ஸ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்கிய டைகர் உட்ஸ் விரைவில் மீண்டு வர அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ட்ரம்ப் மற்றும் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.