புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ ஜான்குமார் ராஜினாமா செய்துள்ளார்
சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்று ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் புதுச்சேரியில் இதுவரை நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM