இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற 482 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்களும், இங்கிலாந்து 134 ரன்களும் எடுத்தன. 195 ரன்கள் முன்னிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுத்து வருவதால் இந்திய பேட்ஸ்மேன்களில் 8 பேர் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். புஜாரா ரன் அவுட்டாகியிருந்தார். அஷ்வின் வேகப்பந்து வீச்சில் அவுட்டாகியிருந்தார்.

106 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாறிய போது கிரீஸுக்கு வந்தார் அஷ்வின். கேப்டன் கோலியுடன் கூட்டு சேர்ந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை போட்டு தாக்கினார். அதன் பலனாக கோலியும், அஷ்வினும் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர். இருவரும் 96 ரன்களுக்கு ஏழாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தி இருந்தனர்.

A sensational century from R Ashwin has helped India to 286.

The hosts have set England a target of 482!#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/U5j7Q5QuVg
— ICC (@ICC) February 15, 2021

மொயீன் அலி பந்துவீச்சில் கோலி LBW முறையில் அவுட்டானதால் அந்த பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து களம் கண்ட குல்தீப்பும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இஷாந்த் ஷர்மா 7 ரன்களில் அவுட்டானார். அஷ்வின் சதம் விளாசி அசத்தினார்.

முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 85.5 ஓவர்களில் 286 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு ரன்கள் 482 இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.