சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளுடன் வந்திருந்தனர்.
விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களின் வெளியீடுகளும் அப்டேட்டுகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், வலிமை படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகிறார்கள்.
அப்டேட் கொடுக்காததால் அஜித்தின் மேனேஜன் சுரேஷ் சந்திராவை மாற்றக்கோரியே ட்ரெண் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அஜித்தின் வெறித்தனமான ரசிகர்கள் அப்டேட் கேட்டு கைகளில் பாதாகை ஏந்தியும் சத்தமாக கத்தியும் அப்டேட் கேட்டும் முழக்கமிட்டார்கள். இந்த புகைப்படங்களும் வீடியோக்களூம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில், வலிமை படத்தில் தனது குடும்பத்தினருடன் அஜித் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அதில், அஜித்துக்கு அம்மாவாக நடிக்கும் சுமத்ரா அமர்ந்திருக்க அருகில் அஜித் உட்பட அமர்ந்திருக்கின்றனர். இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM