மொயின் அலி, ஸ்டுவர்ட் பிராட் சேர்ப்பு: சென்னை டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

சென்னையில் நாளை தொடங்க இருக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட்டில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

image

டெஸ்ட் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ ரூட் அணியில் 4 மாற்றங்கள் இருக்கும் என கூறியிருந்தார். இதில் ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக அணியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார். இந்நிலையில் 12 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் டெஸ்ட்டில் இடம்பெற்ற பெஸ், ஆண்டர்சன், ஜோஸ் பட்லர் ஆகியோர் 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை.

இதில் அவர்களுக்கு பதிலாக மொயின் அலீ, ஸ்டூவர்ட் பிராட், பென் போக்ஸ் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

image

இங்கிலாந்து அணி விவரம்

ஜோ ரூட்
மொயின் அலி
ஸ்டூவர்ட் பிராட்
ரோரி பர்ன்ஸ்
பென் போக்ஸ்
டான் லாரண்ஸ்
ஜாக் லீச்
ஒல்லி போப்
டோம் சிப்லே
பென் ஸ்டோக்ஸ்
ஒல்லி ஸ்டோன்
கிறிஸ் வோக்ஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM