விவசாயிகளை போராடி பிழைப்பவர்கள் என சொல்லி பிரதமர் நரேந்திர மோடி கொச்சைப்படுத்தலாமா? என மக்களவை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “வேளாண் மக்கள் ஏர்கலப்பைகளை தங்களது தோள்களில் சுமப்பார்கள். இந்த அரசாங்கத்தை போல கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமப்பவர்கள் அல்ல. பாலகோட் தாக்குதலை டிஆர்பி ரேட்டுக்காக பயன்படுத்தியதைப் பற்றி இங்கு ஒருவார்த்தை கூட பேசவில்லை. குடியரசுத்தலைவரின் உரை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று இருக்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம், குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோர் கால்பந்து ஆட்டம் ஆடுகின்றனர்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM