முதல்வர் பரப்புரை சென்ற சென்னை- அரக்கோணம் சாலையில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் இருந்தவர் கைது என தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யபப்ட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும், சந்தேகத்திற்கு இடமாக ஆயுதங்கள், பல நம்பர் ப்ளேட்டுகளும் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நபரின் பெயர் அஜீஸ் என்பது தெரியவந்துள்ளது. வேகமாக வந்த கார் மோதியதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து மக்கள் அந்த காரை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், கார் ஓட்டி வந்த அஜீஸ் என்ற நபரையும் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM