“சென்னையில் முதல் டெஸ்ட் சதத்தை வாஷிங்டன் நிச்சயம் பதிவு செய்வார்”-வாஷிங்டனின் தந்தை

முதல் டெஸ்ட் சதத்தை வாஷிங்டன் சுந்தர் சென்னையில் நிச்சயம் பதிவு செய்வார் என வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம்.சுந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி முதலில் பந்துவீசும் நிலையில் அணியில் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் முதல் டெஸ்ட் சதத்தை வாஷிங்டன் சுந்தர் சென்னையில் நிச்சயம் பதிவு செய்வார் என வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம்.சுந்தர் நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “ முதல் ரஞ்சி சதத்தை சேப்பாக்கம் மைதானத்தில்தான் வாஷிங்டன் சுந்தர் அடித்தார். அதேபோல முதல் டெஸ்ட் சதத்தை சென்னையில் நிச்சயம் பதிவு செய்வார்.” என்றார்.

image

முதன் முதலாக இரண்டு தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரே போட்டியில் களமிறங்க உள்ளது குறித்து பேசிய அவர், “ ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து 2 சுழற்பந்து வீச்சாளர்கள் முன்னணி வீரர்களாக திகழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல இளம் வீரர்களை இது ஊக்குவிக்கும், தமிழக கிரிக்கெட்டிற்கு இது நல்லது”என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM