வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் சூரிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு வெளியான ’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன் பாவக்கதைகளில் இடம்பெற்ற நான்கில் ஓர் இரவு என்ற கதையை இயக்கி இருந்தார். அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து பெயரிடப்படாத புதியப் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக ஷூட்டிங் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகின்றது.படத்தின் பாடல் பதிவையும் தொடங்கிவிட்டார் இளையராஜா.
ஏற்கெனவே, விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், சத்தியமங்கலம் பகுதியில் கடும் குளிர் என்பதால் பாரதிராஜா விலகவே விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இந்நிலையில், விஜய் சேதுபதி சூரிக்கு அப்பாவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியிருப்பதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ஏற்கெனவே, விஜய் சேதுபதி ’சீதக்காதி’,’ஆரஞ்சு மிட்டாய்’ படங்களில் வயதானவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM