இயக்குநர் ராதாமோகன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் வைபவ்வுடன் இணைந்துள்ளார் நடிகை வாணி போஜன்.

’அழகிய தீயே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராதாமோகன் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘மொழி’, 2008 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ படங்களின் மூலம் பாராட்டுக்களைக் குவித்தார். அடுத்தடுத்து, ‘பயணம்’, ‘கெளரவம்’, ‘உப்பு கருவாடு’ படங்களை இயக்கினார். எளிமையான கதைக்களத்தோடு உணர்வுப்பூர்வமாக ரசிகர்களின் மனதை ஈர்க்கும் ராதா மோகனின் படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.

image

இந்நிலையில், அவர் தற்போது இயக்கவிருக்கும் புதிய படத்தில் வைபவ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கொண்ட குடும்பப்படம் என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. ஓடிடியில் இப்படம் வெளியாகவுள்ளது.

image

கடந்த ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்ததால், சசிகுமாருக்கு ஜோடியாக ‘பகைவனுக்கு அருள்வாய்’, சூர்யா தயாரிக்கும் புதிய படம், தற்போது ராதாமோகனின் புதிய படம் என்று பிசியாக நடித்து வருகிறார், வாணி போஜன். ஏற்கனவே, வைபவ்- வாணி போஜன் கூட்டணி ‘லாக்கப்’ படத்தில் இணைந்தது என்பது  குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.