விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் அறவழியில் போராடி வருகின்றனர். தலைநகர் டெல்லியின் எல்லையில் நாடு முழுவதும் இருந்தும் விவசாயிகள் அணி அணியாக திரண்டு வந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மோடியின் ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள் போராட்டம் உலக அளவில் தற்போது கவனம் பெற்று வரும் நிலையில் பிரதமர் மேற்கொண்டுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM