போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்

டெல்லி காவல்துறை அறிவுறுத்திய வழித்தடங்களில் மட்டும் டிராக்டர் பேரணியை நடத்துமாறு விவசாய சங்கங்கள் கூறிய நிலையில் சில விவசாய குழுக்கள் மத்திய டெல்லியை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது. இதனிடையே சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி விவசாயிகள் நுழைய முயன்றனர். டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் தடியடி நடத்தினர்.


இந்நிலையில், சிங்கு எல்லையில் காவல்துறையின் தடுப்புகளை தகர்த்து சென்றவர்கள் போராடும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் அல்ல என விவசாயிகள் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்தார். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பால்தேவ் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM