பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் “சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 98% லிருந்து 97% ஆக குறைந்துள்ளது. சசிகலா சீராக உணவு உட்கொள்கிறார். உதவியுடன் நடக்கிறார். சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கும் ஒத்துழைக்கிறார். ரத்தத்தில் சர்க்கரை அளவு 178ஆக உள்ளதால் சசிகலாவை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்த சசிகலா நாளை விடுதலையாகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM