மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM