இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக சொந்த நாட்டில் இருந்து புறப்பட்டதை “சீ யூ சூன் இந்தியா” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி 5 முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இப்போது இங்கிலாந்து அணி இலங்கையில் டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணிக்கு திரும்புகிறார்கள். ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மார்க்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
See you soon India ✈️?? pic.twitter.com/TrGHG3iuy3
— Ben Stokes (@benstokes38) January 23, 2021
இந்நிலையில் இன்று பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “சீ யூ சூன் இந்தியா” என பதிவிட்டிருந்தார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக அவர் புறப்பட்டுவிட்டார் என தெரிவிப்பதற்காகவே அதனை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அண்மையில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய இந்தியாவுக்கு, இங்கிலாந்து நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM