கமலா என்று பெயர் வைத்திருக்கும் பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச “என்ட்ரி” சலுகையை அறிவித்திருக்கிறது பொழுதுபோக்கு பூங்கா ஒன்று.

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுள்ளார் இந்தியா வம்சவளியைச் சேர்ந்தவரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ். அவரின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

image

இப்போது ஹைதராபாத், பெங்களூர், கொச்சியில் பொழுதுபோக்கு பூங்காவை வைத்திருக்கும் நிறுவனம் பெண்களுக்கு ஓர் சலுகையை அறிவித்திருக்கிறது. அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது பொழுதுபோக்கு பூங்காவுக்கு கமலா என பெயர் வைத்துக்கொண்டு வரும் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்தச் சலுகை பூங்காவில் கலமா என பெயர் இருக்கும் முதல் 100 பெண்களுக்கு மட்டும்தான், மேலும் அவர்கள் தங்கள் சரியான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.