மாஸ்டர் ஓடிடி ரிலீஸ் – எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெளியாகுமா?

மாஸ்டர் திரைப்படம் அமேசான் வீடியோ தளத்தில், மிக விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு (ஜனவரி 13) பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இன்று வரை இந்தத் திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகக்கூறி சமூக வலைதளங்களில் #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

image

இந்நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’திரைப்படம் எதிர்பார்த்ததை விட முன்பாகவே வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, ‘லெட்ஸ் ஒடிடி க்ளோபல்’ என்ற ட்விட்டர் பக்கம் வெளியிட்ட பதிவில், “ எதிர்பார்த்ததை விட முன் கூட்டிய மாஸ்டர் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகும்” என்று குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக மாஸ்டர் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் மார்ச் மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் எனவும் மாஸ்டர் திரைப்படத்தை தொலைக்காட்சியில் திரையிடும் உரிமையை பெற்றுள்ள தனியார் செய்தி நிறுவனம் படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM