தமிழகத்தில் பெய்த மழையினால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி பயனற்று போயுள்ளன. பருவம் தவறிப் பெய்த மழை விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

டெல்டா பகுதிகளை பொறுத்தவரை திருவாரூரில் அதிகபட்சமாக 1.20 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும், தஞ்சை மாநகரம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் 80,000 ஏக்கர் நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. புதுக்கோட்டையில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், 5000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையும் சேதமாகின.

image

மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கடலோர மாவட்டமான கடலூரில் கடந்த நிவர், புரெவி புயல்களை விட பருவம் தவறி பெய்த மழையினால் பாதிப்பு அதிகமுள்ளது. மொத்தமாக 2.5 லட்சம் ஏக்கர் நெற்பயிகள், உளுந்து, கடலை, சோளம், கரும்பு பயிர்கள் வீணாகின. தூத்துக்குடியில் 6000 ஏக்கர் நெற்பயிர்கள், மக்காச்சோளம், உளுந்து பயிர்கள் சேதமாகின.

கன்னியாகுமரியில் ரப்பர் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும் அரியலூரில் 5,200 ஏக்கர் நெற்பயிர்களும் பாதிப்படைந்துள்ளன.

திருச்சியில் 30,000 ஏக்கர் சம்பா பயிர்களும், 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட மானாவரி பயிர்களான பருத்தி, மக்காசோளம், மிளகாய் கடலை ஆகியவையும் நீரில் மூழ்கின.

திருத்துறைப்பூண்டி, சீர்காழி, குளித்தலை, கரூர், தேனி, சத்தியமங்கலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் தொடர் கனமழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

image

பயிர் சேத விவரம்:

> திருவாரூரில் 1.20 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு

> தஞ்சையில் 80,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

> மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

> கடலூரில் கடந்த நிவர், புரெவி புயல்களை விட பருவம் தவறி பெய்த மழையினால் பாதிப்பு அதிகம்; மொத்தமாக 2.5 லட்சம் ஏக்கர் நெற்பயிகள், உளுந்து, கடலை, சோளம், கரும்பு பயிர்கள் வீணாகின.

> புதுக்கோட்டையில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், 5000 ஏக்கர் நிலக்கடலை சேதம்

> மதுரையில் சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

> அரியலூரில் நீரில் மூழ்கிய 5,200 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

> திருச்சியில் 30,000 ஏக்கர் சம்பா பயிர்கள் வீணாகின. 10,000 ஏக்கர் மானாவரி பயிர்கள் பருத்தி, மக்காசோளம், மிளகாய் கடலை நீரில் மூழ்கின

> தூத்துக்குடியில் 6,000 ஏக்கர் நெற்பயிர்கள், மக்காச்சோளம், பாசி உளுந்து பயிர்கள் சேதம்

> கன்னியாகுமரியில் 85,000 ஏக்கரில் இருந்துவரும் அரசு மற்றும் தனியார் வசமுள்ள ரப்பர் தொழிலை நம்பியுள்ளோர் பாதிப்பு

தூத்துக்குடி:

கடலூர்: 

புதுக்கோட்டை:

தஞ்சை:

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.