திருக்கோவிலூர்: ஆற்றில் குளிக்க சென்ற 9 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி பலி

திருக்கோவிலூர் அருகே அணைக்கட்டு, தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்ற 9 வயது சிறுமி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்  

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அணைக்கட்டில், தென்பெண்ணை ஆற்றில் பெற்றோருடன் குளித்த மணம்பூண்டியை சேர்ந்த குமரன்விஜயலட்சுமி தம்பதியின் ஒரே மகள் கோபிகாஸ்ரீ(9) எனும் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவிலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

image

இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், ஒரே மகளை இழந்த பெற்றோரின் கதறல் இப்பகுதியில் இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM