ரசிகர்களுடன் அமர்ந்து ‘மாஸ்டர்’ படத்தை பார்த்த விஜய்

நடிகர் விஜய் ரசிகர்களுடன் அமர்ந்து ‘மாஸ்டர்’ படம் பார்த்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

’மாஸ்டர்’ திரைப்படத்தை நடிகர் விஜய் கடந்த 13ஆம் தேதி ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13-ம் தேதி வெளியானது. கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பின் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியான நிலையில், விஜய் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்ப்பாரா என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் காலை 7 மணி காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார் நடிகர் விஜய்.

image

image

தேவி திரையரங்கின் சிசிடிவி வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

திரைப்பார்வைகள்:

> சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? – ‘பூமி’ என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்! 

> மாஸ் காட்டிய ‘ஜே.டி Vs பவானி’ – பொங்கல் ட்ரீட் ‘மாஸ்டர்’ பட விமர்சனம் 

> ஈஸ்வரன்… போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? – திரைப்பார்வை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM