சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை: ஆர்.பி.உதயகுமார்

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர்,

image

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வரவில்லை, அரசியலை முன்னிறுத்தி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்துள்ளார்கள்.

அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது. வரும் 30ஆம் தேதி திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்கு கட்டியுள்ள கோயிலை திறந்து வைக்க தமிழக முதல்வர் நேரில் வருகிறார்” எனத் தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM