ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் கொரனா சூழல் காரணமாக அவருடைய பதவிக் காலம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அது மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்ட நிலையில், சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளராக பொறுப்பு வகித்து ஹன்ஸ் ராஜ் வர்மா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா 1986ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவராவார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் தற்போது கூடுதல் பொறுப்பாக தகவல் தொழில்நுட்ப துறையையும் கவனித்து வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM