லட்சத்தீவு, கன்னியாகுமரி டையே காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழைக்காலம் தாண்டியும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களும் அதிக அளவில் நீரில் மூழ்கி நாசமாகி வருகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றத்தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கன்னியாகுமரி டையே காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. கன்னியாகுமரி அருகே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி,ர் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மிக கனமழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM