நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ராஜபக்சே சகோதரர்கள் அரசின் உத்தரவால், 2019ல் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி, சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அரசின் இந்த செயலுக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. எனினும் எதற்கும் செவிசாய்க்காத இலங்கை அரசு, நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் காலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

image

தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அதில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது; வரலாறு மாறாது என கூறியிருக்கிறார்.

மேலும் நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கொத்துக் கொத்தாக அப்பாவிகள் கொல்லப்பட்டதை மறக்கமுடியாது; சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href=”https://twitter.com/ikamalhaasan/status/1347866608291573760?ref_src=twsrc%5Etfw”>January 9, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.