ஜன.9: சென்னையில் 432 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 432 ரூபாய் குறைந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏறுமுகத்தை சந்தித்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி அதிகபட்சமாக தங்கத்தின் விலையானது 39,080 ரூபாய்க்கு உயர்ந்தது. அடுத்த நாளான நேற்றைய முன் தினம் 38,440 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலையானது, நேற்று 38,032 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

image

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 432 ரூபாய் குறைந்து, 37,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கமானது நேற்று 4,754 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 54 ரூபாய் குறைந்து 4,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5,084 ரூபாய்க்கும், சவரனுக்கு 40,672 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM