தங்கள் நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் சீனா திரும்புவதற்கு அந்த நாடு அனுமதி மறுத்து உள்ளது.

சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஆவார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, அங்கு பல்வேறு நகரங்களில் படித்து வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவசர அவசரமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினார்கள். இதேபோல் இந்திய மாணவர்களும் தாய்நாடு திரும்பினார்கள். இதற்கிடையில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி தங்கள் நாட்டில் வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. ஆனால், தற்போதும் மிகச்சிறிய எண்ணிக்கையில் அந்நாட்டில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

image

சீனாவின் ஹூபே உள்ளிட்ட மாகாணங்களில். இரண்டாவது அலையாக, கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு கடுமையான விதிமுறைகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஷீஜிங்ஹங் மற்றும் ஜிங்டைய் ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் இருந்து வெளிநகரங்களுக்கான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு, நகர எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், வெளிநாட்டு மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்ப அந்த நாடு அனுமதி மறுத்து உள்ளதாக, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே இடையில் பட்டய விமானங்களை இயக்க சீனா அனுமதி மறுத்துள்ளதாகவும், சீனாவிற்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் இன்னும் நீடிக்கின்றன எனவும் இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இன்னும் சீனாவில் திரும்பவில்லை என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.