சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி S21 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. S21, S21 பிளஸ் மற்றும் S21 அல்ட்ரா என மூன்று வெர்ஷனாக இது வெளியாக உள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரியில் இந்த போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

image

இந்த சீரிஸ் போன்கள் மொத்தமாக 11 வண்ணங்களில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாக், பிராவுன் , கோல்ட், கிரே, நாவி, பிங்க், ரெட், சில்வர், டைட்டானியம், வொய்லெட் மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகிறது இந்த ஸ்மார்ட் போன். 

சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க சாம்சங் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாம். இருப்பினும் இந்த வண்ண போன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளியாகாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 14 முதல் வெவ்வேறு கட்டங்களாக இந்த போன்கள் வெளியாக உள்ளனவாம். இதில் சில வண்ண போன்களின் சிறப்பம்சங்கள் மாறவும் வாய்ப்புள்ளதாம். கிரே மற்றும் பிளாக் போன்களில் 5ஜி வசதி இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளதாம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.