ஜன.8: சென்னையில் சவரனுக்கு ரூ.408 குறைந்த தங்கம் விலை!

கடந்த சில நாள்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஏறுமுகத்தை சந்தித்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது. 

image

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.38,440-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.38,032-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,805 ஆக இருந்தது. இன்று ஒரு கிராம் ரூ.4,754-க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,104 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,138 ஆகவும் இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM