ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டுமருந்து போடப்படும் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார்.

வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்குவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சொட்டுமருந்து வழங்கப்படும்.

இந்த மையங்கள் பொதுவாக காலை 7 மணி முதல் மாலை மணிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். மேலும் போக்குவரத்து வசதி இல்லாத ஊர்களிலும் நடமாடும் குழுக்கள் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு சொட்டுமருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.