ஜன. 05: சென்னையில் ஏறுமுகத்தில் தங்கம்.. இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்துள்ளது.

image

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை 38,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 208 ரூபாய் உயர்ந்து தங்கத்தின் விலை 38,728 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 4,815 விற்கப்பட்ட நிலையில், இன்று 26 ரூபாய் உயர்ந்து 4,841 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 74.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியானது 74,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM