இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவிஷீல்டு என்ற பெயரில் இந்திய நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவுடன் கைகோத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இந்தத் தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் ஒப்புதல் பெறும் கட்டம் நெருங்கி விட்டது. இன்று இதுகுறித்து வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்தியதாகவும் இந்தியாவில் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்துவது சரியாக இருக்கும் என பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Covishield is Serum Institute’s version of the vaccine being developed by Oxford University and British drugmaker AstraZeneca Plc.

இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசியை எப்படி கொண்டு சென்று மக்களிடம் சேர்ப்பது என்பது குறித்து ஒத்திகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.