சாலையில் காரை நடனமாட விட்ட நபர் – 41,500 ரூபாய் அபராதம் விதித்த உ.பி போலீசார்

ஸ்கார்பியோ வாகனத்தை மறுவடிவமைத்து அதிக ஒலியுடன் சாலைகளில் ஓட்டிச் சென்றவருக்கு உத்தரபிரதேசம் காசியாபாத் போலீசார் 41,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். 

image

டெல்லியைச் சேர்ந்த நாசும் அகமது என்பவர் தனது எஸ்.யூ.வி. மகேந்திரா ஸ்கார்பியோ காரை மறுவடிவமைக்கும் வண்ணம் காரில் வண்ணவிளக்குகள், ஸ்பிக்கர், ஷாக்கர்ஸ் உட்பட பலவற்றை புகுத்தியது மட்டுமல்லாமல்,  அதிக ஒலியுடன் சாலையில் அந்த வாகனத்தை நடனமாடவிட்டுள்ளார். 

இதனை பார்த்த மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத் போலீசார் காரை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், 41,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM