2020ல் பதிவுசெய்த திருட்டுகுற்ற வழக்கில் 80% கண்டறியப்பட்டன: காஞ்சிபுரம் காவல்துறை

2020 ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் 80% கண்டறியப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்திருக்கிறது.

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020 ஆண்டில் 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 140 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் 3,06,81,790 மதிப்புள்ள களவுபோன சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 64 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவ்வாண்டு மதுவிலக்கு தொடர்பாக 1,894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 321 பெண்கள் உட்பட 1,971 மதுவிலக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர், மேலும் 34,780 மது பாட்டில்களும் 1,773 லிட்டர் எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள், 16 மூன்று சக்கர வாகனங்கள், 4 இரு சக்கர வாகனங்கள் உட்பட 48 என மொத்தம் 68 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 62.70 சதவீதம் வாகன விபத்துக்கள் குறைந்து உள்ளது. இவ்வாண்டு 686 வாகன விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 167 நபர்கள் வாகன விபத்தில் இறந்து உள்ளார்கள், 696 நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறியதாக ரூபாய் 4,59,64,360 அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 496 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1345 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 14 தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிமாவட்ட குற்றவாளிகள் யாரும் இம்மாவட்டத்தில் நுழையாத வண்ணம் பாதுகாக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக காஞ்சிபுரத்தில் மார்ச் முதல் டிசம்பர் மாதம் வரை கொரோனா தொற்றுநோய் பொதுமக்களிடம் பரவாமல் தடுக்க சுமார் 18,358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 17,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக் கவசம் அணியாதவர்கள் மீது சுமார் 1226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 700 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு காணாமல் போன 324 நபர்களில் சம்பந்தமான வழக்கு பதிவு செய்யப்பட்டு 277 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான 112 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தில் ஈடுபட்ட 40 நபர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM