“மன உளைச்சலில் உள்ளார் ரஜினி” – அர்ஜுன மூர்த்தி பேட்டி

தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி இருப்பதாக அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கண்ணை திறந்து பார்த்தால் மோடி ஐயா இந்தியா முழுவதும் செய்யும் நல்ல திட்டங்கள் தெரியும்.

தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற நிலைப்பாட்டை ரஜினியே எடுப்பார். ஆழமாக யோசித்து முடிவு செய்யும் ரஜினியை யாரும் நிர்பந்திக்க முடியாது. மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று ரஜினி எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி உள்ளார்.

Arjunamurthy Ra (@RaArjunamurthy) | Twitter

மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் நினைத்தார், ஆனால் மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர். நான் எப்போதும் அவருடன் இருப்பேன், மக்கள் சேவை செய்வேன். உடல்நலம் குறித்து மருத்துவர்கள் சொன்ன காரணத்தால் கட்சியின் வேலைகள் செய்ய இயலாது என்பதால் ரஜினி அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டார். மற்றபடி ஒரு நல்லாட்சி வேண்டும் என்பதில் மக்களில் ஒருவராக அவர் துணை நிற்பார். மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ரஜினியுடன் இணைந்தேன்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM