அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் “கோவிட் -19, பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் இன நீதி என நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது” என்று கூறினார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என்று கூறினார். ஜனவரி மாதம் அதிபர் பதவியை அவர் ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் தனது அணி சவால்களை சமாளிக்க முயற்சிப்பதாகவும் கூறினார்.
“கோவிட்-19, பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம் மற்றும் இன நீதி ஆகியன என்று நமதுதேசம் ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. ஜனவரி மாதம் வந்துவிட்டது, எனவே வீணடிக்க நேரமில்லை. அதனால்தான் நானும் எனது அணியும் கடினமாக உழைக்கிறோம். முதல் நாளில் இருந்து நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம் ”என்று பைடன் ட்வீட் செய்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM