ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்
கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ”ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும். ஜனவரியின் எந்த வாரத்திலும் பயன்பாட்டுக்கு வரலாம். மக்களின் பாதுகாப்பும், தடுப்பூசியின் வீரியமும்தான் எங்களுக்கு முக்கியம். 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும். கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும் முன்களப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM