இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து பாரத் பயோடெக் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள, கோவாக்சின் எனும் கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்கு தன்னார்வலர்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

image

பாரத் பயோடெக் கோவிட் -19 தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனைக்கு தேவையான எண்ணிக்கையில் தன்னார்வலர்கள் கிடைக்கவில்லை என  எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. “கோவாக்சின்” என்ற இந்த தடுப்பூசியின் இறுதி கட்ட  பரிசோதனைக்காக சுமார் 1,500 தன்னார்வலர்கள் தேவை. “நாங்கள் 1,500 முதல் 2,000 பங்கேற்பாளர்களை விரும்பினோம், ஆனால் இதுவரை சுமார் 200 பங்கேற்பாளர்கள் மட்டுமே கிடைத்துள்ளனர். அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் கிடைக்கும்போது, நாங்கள் ஏன் ஒரு சோதனையில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்து மக்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்க விரும்பவில்லை” என்று எய்ம்ஸில் சமூக மருத்துவத் துறையின் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் சஞ்சய் ராய் கூறினார்.

கோவாக்சினின் முதல்கட்ட சோதனை தொடங்கும்போது, எங்களுக்கு 100 பங்கேற்பாளர்கள் தேவையிருந்தது. ஆனால் 4,500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றோம். இரண்டாம் கட்ட சோதனையின் போது கூட, மருத்துவமனைக்கு சுமார் 4,000 விண்ணப்பங்கள் வந்தன.

தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்க மக்கள் முன்வர வேண்டும் என்றும், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி பெற மருத்துவ பரிசோதனையில் பங்கேற்பது ஏன் முக்கியம் என்பது குறித்த விளம்பரங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் டாக்டர் ராய் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.