சமீப காலமாக கொலைகளுக்கு நிகராக தற்கொலைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சில பிரபலங்களின் தற்கொலைகள் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. தற்கொலை விழிப்புணர்வு பற்றி பலமுறை எடுத்துக்கூறினாலும் இந்த தற்கொலை எண்ணம் பலரையும் ஆட்கொண்டு உயிரை பறித்துச் செல்கிறது. தற்கொலை எண்ணம் எதனால் வருகிறது? தற்கொலை எண்ணம் ஆட்கொண்டவரின் மூளை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து பெர்லின் சாரிட் மற்றும் சின்சினாட்டி பல்கலைக்கழகங்கள் ஆய்வு நடத்தியது.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு விஷயத்தால் மூளையின் ஏற்படும் தாக்கமானது ஒருவித அழுத்தத்தையும், மன வலியையும் உண்டுபண்ணி, அடுத்தது என்ன என்ற எண்ணத்தையே அழித்து, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை ஆழமாக உருவாக்குவதால், மூளை எடுக்கும் விபரீத முடிவுதான் தற்கொலை என்று சொல்லலாம்.

image

சில அறிகுறிகள் தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளதை காட்டிக்கொடுத்துவிடும்.

’நான் சாகப்போகிறேன்’, ‘நான் செத்துப்போயிருக்கலாம்’ அல்லது ‘நான் பிறக்காமலே இருந்திருக்கலாம்’ என்பதுபோன்ற வார்த்தைகள் ஒருவரிடம் இருந்து வந்தால் அவருக்குள் தற்கொலை எண்ணங்கள் உருவாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக அவமானம், குற்ற உணர்ச்சி மற்றும் ஏமாற்றம் போன்றவை ஒருவருக்குள் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது.

  • தனிமையை விரும்புதல், சமூகத்துடன் சேர்ந்து வாழாமை
  • ஒருநாள் உற்சாகமாக இருத்தல், அடுத்தநாளே திடீரென மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாதல்
  • நம்பிக்கையற்ற நிலை
  • ஆல்கஹால் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல்
  • தினசரி சாப்பிடுதல், தூங்குதல் போன்றவற்றில் மாற்றம்
  • ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல்
  • தன்னிடம் உள்ளதை எடுத்து மற்றவர்களுக்கு உதாரத்துவமாகக் கொடுத்தல் போன்ற சில அறிகுறிகள் ஒருவர் தற்கொலை எண்ணத்தால் ஆட்கொள்ளப் பட்டிருக்கிறார் என்பதைக் காட்டுறது.

image

இதுபோன்ற அறிகுறிகள் அதிகம் தென்படும் விபத்துகளால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள், இதய நோய் ஏற்பட்டவர்களை வைத்து பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வில் இறக்கும்போது தற்கொலை எண்ணத்தால் மரணத்தை நோக்கியிருக்கும் மனிதனின் மூளையும், விலங்கின் மூளையும் ஒரேமாதிரி செயல்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மூளையே மறுசீரமைப்பு செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

குறிப்பாக இவர்கள் மனித நரம்பு மண்டலத்தை ஆராய்ந்ததில், ஒன்பது பேரில் எட்டு பேரின் மூளை தற்கொலை எண்ணத்தை தவிர்க்கவே முயற்சி செய்வதாக கண்டுபிடித்தனர்.

தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி?

பிறரிடம் இதுபற்றி மனம்விட்டு பேச பலர் சங்கடப்படுவார்கள். யாரிடமும் எதையும் பகிராமல் இருப்பதே தற்கொலை எண்ணத்தை அதிகரித்துவிடும். சில நேரங்களில் அதிலிருந்து வெளிவந்தாலும், ஒரு சிறிய பிரச்னைகூட மீண்டும் அந்த எண்ணத்திற்குள் தள்ளிவிடும். எனவே மன அழுத்தம் அல்லது அதீத வருத்தம், தனிமை உணர்வு ஏற்படும்போது அதிலிருந்து வெளிவர பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

மனநல மருத்துவரிடம் சென்று எனக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மேலோங்குகிறது என்று சொல்வதற்கு பலருக்கும் தயக்கம் இருக்கும். அதற்கு மருந்துகளை எடுத்துக்கொள்ள பெரிதும் விரும்பமாட்டார்கள். ஆனால் தயக்கத்தை கலைத்தெறிந்துவிட்டு, பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் தற்கொலை எண்ணம் எழுவதைக் குறித்து எடுத்துக்கூற வேண்டும். மேலும் உடற்பயிற்சி மற்றும் ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதும் மன அமைதியைக் கொடுக்கும். மனநல ஆலோசனை பெறுவது முற்றிலுமாக தவறான எண்ண ஓட்டங்களைத் தவிர்க்க உதவும்.

image

தற்கொலை எண்ணம் நிரந்தரமானது அல்ல என்பதை ஆழமாக மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். நம்பிக்கையற்ற அல்லது வாழ்க்கைமீது வெறுப்பு வரும்போது, சரியான சிகிச்சைமுறை தற்கொலை எண்ணத்தின்மீதான பார்வையை மாற்றும் என்பதை மறந்துவிட வேண்டாம். மன கிளர்ச்சிக்கு ஏற்றார்போல் இயங்காமல் மனதை கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும்.

போதைப்பொருட்கள் மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். மன உளைச்சலைத் தவிர்க்க, இதுபோன்ற போதைப்பொருட்களை எடுப்பதால் நிதானத்தை இழந்து தற்கொலை எண்ணம் வலுப்பெறுமே தவிர, அதிலிருந்து வெளிவர உதவாது என்பதை மறக்கவேண்டாம்.

விவசாயிகள் போராட்டக்கள ‘ஹீரோ’… நடிகர் சித்து மீதான நம்பிக்கையும் ‘எச்சரிக்கை’யும்! 

ஆபத்தான இணையங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அவை தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கும்.

சாவதற்கான காரணங்களை மட்டுமே யோசிக்காமல், வாழ்வதற்கான காரணங்களை பட்டியலிட வேண்டும். ஒருமுறை பெற்றோர், குழந்தைகள், குடும்பத்தை பற்றி யோசித்தாலே தற்கொலை எண்ணம் மேலோங்காது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.