சர்வதேச விரைவுத் தபால், பார்சல் சேவைகள் மீண்டும் தொடக்கம்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு சர்வதேச விமானங்கள் இயக்கப்படாததால் ஏராளமான நாடுகளுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விரைவுத் தபால், பார்சல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

image

இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளை இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு சர்வதேச விமானங்கள் இயக்கப்படாததால் ஏராளமான நாடுகளுக்கு இந்த சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, விரைவு சர்வதேச தபால் – 67 நாடுகளுக்கும், விமானம் மூலம் அனுப்பப்படும் பார்சல்கள் 82 நாடுகளுக்கும், ஐடிபிஎஸ் 15 நாடுகளுக்கும், பதிவு தபால்கள் 82 நாடுகளுக்கும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல், சென்னை மாநகர வடக்கு பிரிவு தபால் நிலையங்களுக்கான மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM