சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேக 12,000 ரன்கள்: விராட் கோலி சாதனை!

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன் மழை பொழிவது அவரது பாணி. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 12,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். கடந்த 2008 தொடங்கி இன்றுவரை ஒரு மாமாங்கமாக இந்தியாவுக்காக விளையாடி வரும் கோலி இந்த சாதனையை இன்று எட்டியுள்ளார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் கோலி. வெறும் 242 இன்னிங்ஸில் விளையாடி, கோலி அதிவேகமாக 12000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருந்தார். கோலி தற்போது அந்த சாதனையை முடித்துள்ளார். 


இவர்கள் தவிர பாண்டிங் (314 இன்னிங்ஸ்), குமார் சங்கக்கரா (336 இன்னிங்ஸ்), ஜெயசூர்யா (370 இன்னிங்ஸ்) விளையாடி 12000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM