டிச.3 பிற்பகல் பாம்பன் அருகே நெருங்கும் புரெவி புயல் – வானிலை மையம்

திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் புரெவி புயல் நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது. பாம்பன் – கன்னியாகுமரிக்கு இடையே டிச.3ஆம் தேதி நள்ளிரவு முதல் டிச.4ஆம் தேதி அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 70 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ கிழக்கு வடகிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ள புயல், 13 கி.மீ வேகத்தில் நகர்ந்துவருகிறது. இது நள்ளிரவு இலங்கை அருகே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/QjavAzbLwm8″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

தற்போது புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் காரைக்கால மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்துவருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM