தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுகிறது.தென் தமிழகத்தில் இன்று முதல் சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.

தாமிரபரணி உள்ளிட்ட தென்மாவட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை. தகவல் தொடர்பு சாதனங்கள் ஏதுமின்றி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளவர்களை மீட்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை.

சென்னையில் மழை நீர் தேங்கியதற்கான காரணங்கள் குறித்து நீர்வழித்தடங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு. நிதி ஆதாரத்தைப் பொறுத்து படிப்படியாக நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி.

சாதகமான முடிவு கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்.டெல்லியில் போராடும் விவசாய அமைப்பினர் திட்டவட்டம்.

இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு திடீர் அழைப்பு. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் ஆதரவை மறுபரிசீலனை செய்ய போவதாக பாஜகவுக்கு கூட்டணி கட்சி எச்சரிக்கை.

விவசாயிகளின் போராட்டத்தை மதித்து, 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் ரத்து செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்.

விவசாயிகளுக்கு நன்மை செய்யவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி விளக்கம். எதிர்க்கட்சிகள் விவசாயிகளை ஏமாற்றி தவறாக வழிநடத்தி வருவதாகவும் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.

7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு நிதி ஒதுக்கீடு. 16 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை.

முறைகேடு செய்யும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து.

டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.