`கட்சி ஆரம்பிக்கலாமா?’ -ரஜினி தீவிர ஆலோசனை

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், `கட்சி ஆரம்பிக்கலாமா?’ எனக் கேள்வி கேட்டு நிர்வாகிகளின் பதிலை ரஜினி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள், ரஜினியே முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Also Read: அரசியல் கட்சி… ஜனவரியில் விவரங்கள் அறிவிப்பா? – எதிர்பார்ப்பில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

இதற்கிடையே வரும் ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாகவும், அவ்வாறு தொடங்கினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் இன்று ஆலோசனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது!

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த்
மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தும் நிலையில், அங்கு குவிந்துள்ள ரசிகர்கள், நிர்வாகிகள்..!

Posted by Junior Vikatan on Sunday, November 29, 2020

ரஜினி இன்று முக்கிய முடிவு!

ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், கொரோனா பரவல் காரணமாக, கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனைநடத்துகிறார். சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதனால் அங்கு மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள்.

Also Read: “கட்சி நோ… அரசியல் ஓகே” – ரஜினி விவகாரத்தில் நடக்கப்போவது என்ன?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.